பெரியார் என்ன கடவுளா? அல்லது பகுத்தறிவு என்ன வெங்காயமா?

சில நாட்களுக்கு முன்பு இது தான் உண்மை என்ற வலைப்பூவில் பெரியார் ஆதி திராவிடர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்னதாக எழுதியிருக்கிறார்கள்,
அதற்கு பெரியார் சொன்ன காரணம் இஸ்லாம் மதத்தில் ஜாதி அடிபடை இல்லை என்று.

ஆனால் மனிதனை நேசி என்ற வலைப்பூவில் இஸ்லாம் மதம் பெண்களை மதிப்பதில்லை என்று எழுதியிருக்கிறார்கள். இதற்கு தமிழ் இஸ்லாம் வலைப்பூவில் பிறகு ஏன் பெரியார் இஸ்லாம் மதத்துக்கு திராவிடர்களை மாற சொன்னார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

எனது சந்தேகம் பெரியார் ஆசைப்பட்ட பகுத்தறிவு உண்மையில் வளர்கிறதா என்பது தான்!
பகுத்தறிவு என்றால் என்ன? கேள்வி கேள் என்பது தானே! சொன்னது பெரியாராக இருந்தாலும் ஏன் இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா!
ஆனால் பெரியாரை கடவுளாகவே மாற்றும் திட்டம் அல்லவா இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் ஆசை பட்டது மக்களிடம் விழிப்புணர்வு.
ஜாதி மத பேதமில்லாத சமநிலை. பெரியாரை பற்றி படிக்கும் முன்னறே மத அடிப்படையில் நம்பிக்கை இல்லாத நான். சிறு வயதிலிருந்தே சாமி கும்பிட மாட்டேன் என்று வீட்டில் சண்டை போட்டிருக்கிறேன், அப்பொழுது இவன் என்ன பெரியார் மாதிரி பேசுறான் என்ற வார்த்தையால் ஈர்க்க பட்டு தான் பெரியாரை படித்தேன், ஜாதி மத கொள்கைகளில் என்னை போலவே அவரும் நம்பிக்கையற்று இருந்தார் என்பதற்காக அவரை முழுமையாக ஏற்கவோ அவரின் கொள்கைகளை பரப்புவதற்கோ என்ன இருக்கிறது.யாருக்காவது வாழ்க கோஷம் போடுவதோ, ஒழிக கோஷம் போடுவதோ ஆட்டு மந்தை கூட்டம் அல்லவா! இதையா பெரியார் விரும்பினார்.

மூட நம்பிக்கை என்பது ஏதாவது ஒன்றை பிடித்து தொங்கி கொண்டிருப்பது! பெரியாரின் கொள்கைகளை மட்டுமே பிடித்து தொங்கி கொண்டிருப்பதற்கு வேறு என்ன பெயர் இருக்க முடியும். கடவுள் நம்பிக்கை என்பது நம்முடைய தனிப்பட்ட சுதந்திரம்!
என்னிடம் யாராவது வந்து கடவுள் இருக்கிறார் என்று வாதம் செய்தால் இல்லை என்று வாதிட எனக்கு உரிமை உண்டு. வாதிட மட்டுமே சண்டை போட அல்ல. கடவுளை பற்றிய வாதம் முடிவில்லாதது என்றும் அனைவருக்கும் தெரியும், இருந்தும் ஏன் அதில் நேரத்தை செலவிட்டு செய்ய வேண்டிய வேலைகளை புறக்கணிக்க வேண்டும்.

ஆன்மிக வாதியான விவேகானந்தர் கூட மதவாதிகள் கிணற்று தவளைகள் என்று குறிப்பிட்டு உள்ளார். கடலில் இருப்பவர் நாம். நாம் அனுபவிக்க கடலில் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு கிணற்றில் குதித்து சண்டை போடுவது தேவையா?

41 வாங்கிகட்டி கொண்டது:

நிவிஷா..... said...

Nice post. nala kelvigal

நட்போடு
நிவிஷா

Anonymous said...

அருண், நீங்க உங்க சந்தோஷத்துக்காகதானே வலை பதிகிறீர்கள்? இப்போது அதற்கும் ஆப்பு வெச்சிக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க. சொன்ன அத்தனையும் உண்மைதான். ஆனால் பெரியாரின் கண்மூடித்தனமான முரட்டு பக்த்தர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியுமா? பார்க்கலாம்.

அப்புறம், இந்த பதிவுக்கு காரணம் என்ன?
நடைமுறை வாழ்வில் நடந்த நிகழ்ச்சியா, இல்லை யாரேனும் குறிபிட்ட பதிவருக்கு உள்குத்தா?

தமிழ்கண்ணன்.

வால்பையன் said...

//பெரியாரின் கண்மூடித்தனமான முரட்டு பக்த்தர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியுமா?//

இந்த பதிவின் காரணமே இது தான்.
இந்த பக்திக்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்.

//நடைமுறை வாழ்வில் நடந்த நிகழ்ச்சியா,//

இதுவரை என்வாழ்வில் நடந்த கடவுள் பற்றிய விவாதத்தில் ஒரு முறை கூட நான் தோற்றதில்லை. ஆனால் இதுவே வாழ்க்கையாக கொண்டால் என் சுயத்தை இழந்து விட்டு இதே பொழப்பாக திறிவேனோ என்ற சந்தேகம் வருகிறது. இது என் வாழும் தகுதி இல்லையே! வேறு பணி நிறைய இருக்கிறது செய்து முடிக்க.

//யாரேனும் குறிபிட்ட பதிவருக்கு உள்குத்தா?//

நமக்கு அந்த அளுவுக்கெல்லாம் தைரியம் இல்லைங்கண்ணா

வால்பையன்

போலி மதச்சார்பின்மை said...

நன்று சொன்னீர்கள் அருண் . இது போல் போலி மதச்சார்பின்மை பேசும் ஆட்களை வெளி கொணரவேண்டும்

Selva said...

You have wrongly understood the periyarists. It is not that Periyar has solution to all the problems. Periyar is not beyond criticism. Criticising him is one thing and throwing aspersions against him is another thing. When Periyar is criticised a real periyarist is not offended. You can criticise him but you must remember Tamil History in the recent past has not witnessed a leader like Periyar. He is an inspiration for so many. If you want to criticise Periyar read him well and substantiate your arguments with facts. No problem. It will create a good discussion and we can grow. But don't make sweeping statements. I also agree that belief in religion and God depends on each one's experience and thinking. Periyar opposed God because he had to oppose casteism.But the question remains whether the religion can wither away. read the article below too. http://www.keetru.com/literature/essays/thasan.php

வால்பையன் said...

பெரியார் மீது பகுத்தறிவாலர்கள் கொண்டுள்ள பற்றை போலவே தான் கடவுள் மீது பக்தர்கள் பற்றை காட்டுகிறார்கள்.

பக்தர்களுக்கு பக்தி போதை என்றால் பகுத்தறிவாளர்களுக்கு பெரியாரிஷம் போதை!

நான் அவரல இந்த ஆட்டைக்கு

பெரியாரை படிக்கலாம், பின்பற்ற அல்ல தெரிந்து கொள்ள!

தமிழச்சி said...

//பெரியார் என்ன கடவுளா? அல்லது பகுத்தறிவு என்ன வெங்காயமா?//


ஏனோ தானோ என்று வாக்குவாதத்தை தொடங்கி விட்டீர்களா? யார் சொன்னார் பெரியாரை கடவுளென்று!ஒன்றுமில்லாமல் போவதை தான் பெரியார் வெங்காயம் என்று குறிப்பிடுகிறார். பெ ரியாரை புனிதப்பிம்பம் கட்டிக் கொண்டு வர உண்மையான பெரியாரிஸ்டுகள் விரும்புவதில்லை. போலி கம்யூனிஸ்ட், போலி மார்க்ஸியம் போல் போலி பெரியாரிஸ்டுகளின் கொள்கை திரிப்பு வாதங்களை வைத்துக் கொண்டு நீங்கள் உண்மை பெரியாரிஸ்ட்டுக்களை அளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.


//பெரியார் மீது பகுத்தறிவாலர்கள் கொண்டுள்ள பற்றை போலவே தான் கடவுள் மீது பக்தர்கள் பற்றை காட்டுகிறார்கள்.//

பெரியாரிசத்தை படித்ததாக சொல்லிக் கொள்ளும் உங்களுக்குள் இப்படியொரு கேள்வி எழுகிறது என்றால் இன்னும் நீங்கள் பெரியாரியலை முழுவதுமாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

//பெரியாரை படிக்கலாம், பின்பற்ற அல்ல தெரிந்து கொள்ள!//

பெரியாரியம் என்பதே பகுத்தறிவு சார்ந்தது. பகுத்தறிவு என்பதை உங்கள் பக்குவத்தில் எதை சொல்கிறீர்கள்? உங்களுக்கு குட்டையை குழப்புவதற்கு
பெரியாரியம் தான் கிடைத்தது என்றால் எல்லாவற்றையும் படித்துவிட்டு பகுத்தறிவுக்கு அர்த்தம் தெரிந்துக் கொண்டு பதிவு போடுங்கள். உங்களின் பதிவும் அவதூறுகளை முன்னெடுத்துச் செல்லும் துரோகத்தனமாக இருக்க வேண்டாம்.

Tech Shankar said...

I am a small kid. so not knowing manything about these topics.

But doing comments 4 ur friendhsip
enjoy

வால்பையன் said...

வருக தோழர் தமிழச்சி!

எனக்கு பெரியார் மீது எனத கோபமுமில்லை, பெரியாரை புனித பிம்பமாக காட்ட முயலும் போலி பகுத்தறிவாளிகள் தான் என்னை பயமுறுத்துக்கிறார்கள்.

பெரியாரின் கொள்கைகளில் பார்ப்பனிய எதிரிப்பும் ஒன்றே தவிர அது மட்டுமே கொள்கையல்ல என்பது உங்களுக்கும் தெரிந்த ஒன்று, அவரது பெண் விடுதலை கருத்துகளை உலகுக்கு பரப்பு நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் அனைத்தையும் நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள்.

நீங்கள் வாழும் பிரான்ஸ் அளவுக்கு மக்கள் விழிப்புணர்வில் 10 சதவிகிதம் கூட தமிழர்களுக்கு இல்லை, அதற்காக போராடினார் பெரியார், அப்போது அதற்கு தடையாக இருந்த அனைத்தையும் சாடினார், அதில் பார்பனியமும், உய்ர்சாதியமும் ஒன்று.

ஆனால் இன்று பார்பனியம் பல் பிடிங்கப்பட்ட பாம்பு, கவனிக்கவேண்டியது உயர்சாதியியம்,
பெரியாரியலை பரப்ப நினைப்பவர்கள் இதற்கு ஒரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.

குறுகிய கால சுயநல அரசியல் நோக்கோடு தான் அவர்களது கொள்கைகளும் அறிக்கைகளும் உள்ளது என்பது உங்களுக்கே தெரியும்.

அரசியல்வாதிகள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பையும் நான் அறிவேன், நீங்கள் சொல்வது போல பெரியாரை உண்மையிலே மதிப்பவன், மற்றவர்கள் கருத்துகளுக்கும், உரிமைக்கும் மதிப்பு கொடுப்பவர்கள்.
அதே நேரம் பெரியாரின் அனைத்து முற்போக்கு சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த நினைப்பவர்கள்.

தனிமனித வாழ்வில் ஒருவன் முன்னேற கல்வியும், உழைப்பும் அவசியம். இந்த அடிப்படையை இங்கிருக்கும் பெரியாரியவாதிகள் கிராமபுரங்களில் ஏற்படுத்தி கொடுத்தார்களா? இல்லையே!

பெரியார் என்ற முற்போக்கு சிந்தனைவாதியின் பெயரை வெறும் புகழுக்காக பயன்படுத்துபவர்களையே நான் சாடுகிறேன்.

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே!

தமிழச்சி said...

//எனக்கு பெரியார் மீது எனத கோபமுமில்லை, பெரியாரை புனித பிம்பமாக காட்ட முயலும் போலி பகுத்தறிவாளிகள் தான் என்னை பயமுறுத்துக்கிறார்கள்.//

நீங்கள் பயப்படத் தேவையில்லை. போலிகளை இனம் காணுங்கள் அம்பலப்படுத்துங்கள். தி.க. தலைவர் வீரமணியாகவோ அல்லது பெ.தி.க. தலைவர் கொளத்தூர் மணியாகவோ இருக்கட்டும். அவர்களில் யாரிடம் போலித்தனம் இருக்கின்றதோ கேளுங்கள் கேள்வியைக் கேளுங்கள. அதைவிட்டுவிட்டு ஏனோதானோ என்றிருக்கின்றது உங்களுடைய பதிவும் உங்களுடைய பின்னூட்டத்தில் இருக்கும் பதிலும்.

000

கருணாநீதியின் முதுகில் நடந்த அறுவை சிகிச்சையில் விரைவில் குணமடைய வேண்டி திருக்கோவிலூரைச் சேர்ந்த தி.மு.கவினர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கின்றனர். அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, கடஸ்தாபனம் போன்ற யாக பூஜைகளையும், நீண்ட ஆயுள் இருப்பதற்காக ஏகாதசை ருத்ராஜபம் என்ற பூஜையும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே மஞ்சள் தூண்டுக்கு மாறிவிட்ட "நாதஸ்வரம்" (கருணாநீதியை பெரியார் நாதஸ்வரம் என்றே குறிப்பிடுவார். இடத்திற்கு தகுந்தபடி ஆட்டம் போடும் குணம் கருணாநீதிக்கு) இன்னமும் பெரியாரின் கொள்கைகளோடு தன்னை அடையாளப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த "யாக பூஜை" குறித்து விமர்சிக்கும் நேர்மையும் கீ.வீரமணியிடம் இருக்காது. இப்படி போலிகளை வெளியில் தேட வேண்டியதில்லை. எல்லாம் பெரியாரியத்திற்குள்ளே இருக்கிறது. அதை எதிர்ப்பது தானே நம் கடமை.

000

உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல.
உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை
வேண்டாமென்று கூறவில்லை.

மக்கள் யாவரும் விகிதாசாரம் உழைத்து,
அவ்வுழைப்பின் பலனை விகிதாசாரம் பகிர்ந்து,
தத்தம் தகுதிக்கும், தேவைக்கும்
அவசியமான அளவு அனுபவிப்பதை
நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால்,

தேசீயம் என்றும்,
தேச சேவை என்றும்,
தேச பக்தி என்றும்,
தேச விடுதலை என்றும்,
தேச ஒற்றுமை என்றும்,
ஆத்மார்த்தம் என்றும்,
பிராப்தம் என்றும்,

பல பல சொற்களைக் காட்டி
மெய்வருத்திப் பாடுபட்டுப்
பொருளீட்டும் பொதுமக்களை,
கட்டின ஆடை கசங்காமல்,
மெய்யில் வெய்யில் படாமல்
வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார்
வஞ்சித்து ஏமாற்றி வயிறு வளர்ப்பதை -
ஏன்? உழைப்பாளிகளைவிட
அதிக சுகமான வாழ்வு வாழ்வதை -
அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே
நான் இதைச் சொல்லுகிறேன்.


என தந்தை பெரியார் சொல்கிறார். அவை தமிழ்நாட்டில் பாதியை வளைத்துப்போட்டிருக்கும் தி.க ஆட்களுக்கும் பொறுந்தும்.

எதை பேசவில்லை பெரியார்? யாரை விமர்சிக்கவில்லை பெரியார்? இன்று எல்லாம் மறைக்கப்பட்டு பெ ரியாரின் செல்லப்பிள்ளைகள் போல் இன்று நாடகமாடும் ஓட்டு பொறுக்கிகளுக்கு என்ன சொன்னாலும் மானம் வந்துவிடாது.

000

இனி நீங்கள் பெரியார் குறித்து பதிவுகள் எழுதும் போது நேரடியான சொல்லிவிடுவது நல்லது. குழப்புகிறது உங்களுடைய பதிவு பல அர்த்தங்களில்...

வால்பையன் said...

உங்களின் மற்ற கருத்துகள் அனைத்தையும் ஒப்புகொள்கிறேன்

//நீங்கள் பெரியார் குறித்து பதிவுகள் எழுதும் போது நேரடியான சொல்லிவிடுவது நல்லது. குழப்புகிறது உங்களுடைய பதிவு பல அர்த்தங்களில்...//

இந்த பதிவு எழுத காரணம், பெரியார் அனைவரையும் இஸ்லாம் மதத்துக்கு மாரச்சொன்னார், அதனால் இஸ்லாமே சிறந்த மதம் அல்லது மார்க்கம் என்று வேறொரு புனித பிம்பத்தை ஏற்படுத்த பார்த்தது தான்.
மற்ற பகுத்தறிவாளர்கள் இதை பற்றி மறுப்பு எதுவும் சொல்லாததே என்னை முதன் முதலாக பெரியாரின் பெயரை பயன்படுத்தி பதிவெழுத வைத்தது.

உங்களின் நீண்ட கருத்துகளுக்கு நன்றி!

Tech Shankar said...

நான் குழந்தைங்க எனக்கு ஒன்னும் தெரியாது ஆளை விடுங்க

Tech Shankar said...

enna idhu comment moderation

ean ipadi?

வால்பையன் said...

தமிழ்நெஞ்சம் said...

enna idhu comment moderation

ean ipadi?//

இது போன வருடம் எழுதிய பதிவு நண்பரே, அதான்

RAMASUBRAMANIA SHARMA said...

தற்சமயம் "தந்தை பெரியாரின் கொள்கைகள்"...பெரும்பாலும் அரசியல்வாதிகளால்....அவர் அவர் வசதிக்கேற்ற இடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது"...என்பது எனது எண்ணம்...மற்றபடி "தந்தை பெரியாரின் கொள்கைகள்"....மிகவும் வலிமையானவை....எல்லாவிதமான மூடநம்பிக்கைகளயும் அவர் எதிர்த்து உள்ளார்...

வால்பையன் said...

"தந்தை பெரியாரின் கொள்கைகள்"....மிகவும் வலிமையானவை....எல்லாவிதமான மூடநம்பிக்கைகளயும் அவர் எதிர்த்து உள்ளார்...//

சிறிதும் மறுக்க முடியாத உண்மைகள்,
ஆனால் பாருங்கள் இன்று தமிழக அரசு அறநிலைத்துறை என்ற அமைப்புடன் இந்து மதத்தை பேணி பாதுகாக்கிறது.

பெரியாரின் தொண்டர்கள் பார்பனிய எதிர்ப்பில் பிஸியாக உள்ளார்கள்.

மக்களிடம் மூடநம்பிக்கை அப்படியே உள்ளது!

மந்திரன் said...

அது என்ன பகுத்தறிவு என்றாலே பெரியார் தானா ? ஏன் ஆன்மிக வாதிகளிடம் பகுத்தறிவு இல்லையா ? பகுத்தறிவிற்கு மொத்த குத்தகை காரார் பெரியார் தானா ?
நானும் பெரியாரின் புத்தகங்களை படித்துள்ளேன் . அவரின் கொள்கைகளில் பிடித்தது பெண் உரிமை ,சாதி எதர்ப்பு மட்டுமே . கடவுள் எதிர்ப்பு என்று வருகையில் ஏன் இந்து மதம் மட்டும் பழிக்க படுகிறது ? சரியான விளக்கம் தேவை . பெரியாரின் கொள்கை படி அரசியலில் இறங்க கூடாது , மக்களோடு மக்களாக உழைக்க வேண்டும் என்று இல்லாமல் இன்று 2 கட்சிகள் பெரியாரின் கொள்கையை பரப்புகிறேன் என்று இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு போட்டி போடு கிறார்கள் .
பெரியார் கூடவே இருந்து பெரியாரின் கொள்கைக்கு முரணாக கட்சி ஆரம்பித்து பதவியில் உட்க்கார பல கொலைகள் செய்தது யார் ? ஆன்மிகத்தின் பெயரை சொல்லி எப்படி பல கொலைகள் மன்னர் காலங்களில் நடந்ததோ அதே போலதான் இப்போது பகுத்தறிவின் பெயரால் நடக்கிறது . இது பெரியாரின் தோல்வியா ? இல்லை அவரின் கொள்கைக்கு தோல்வியா ?.. நானும் சாமியை கும்பிட்டு பல வருடங்கள் ஆகின்றன . என்னையும் என் வீட்டில் பெரியார் கட்சி என்றே திட்டுகின்றனர் . காரணம் நான் கேட்ட சில கேள்விகள் தான் . ஆனால் என் கேள்விகளுக்கு பதில் அவர்களுக்கு தெரிய வில்லையே தவிர பதிலே இல்லை என்று நான் நினைக்கவில்லை . என்னை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை என்பது வேறு , மூட நம்பிக்கை வேறு

தமிழச்சி said...

///இந்த பதிவு எழுத காரணம், பெரியார் அனைவரையும் இஸ்லாம் மதத்துக்கு மாரச்சொன்னார், அதனால் இஸ்லாமே சிறந்த மதம் அல்லது மார்க்கம் என்று வேறொரு புனித பிம்பத்தை ஏற்படுத்த பார்த்தது தான்.
மற்ற பகுத்தறிவாளர்கள் இதை பற்றி மறுப்பு எதுவும் சொல்லாததே என்னை முதன் முதலாக பெரியாரின் பெயரை பயன்படுத்தி பதிவெழுத வைத்தது.///

நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவை நான் இன்னும் பார்க்கவில்லை. முடிந்தால் இணைப்பு கொடுக்கவும். நீங்கள் சமூகத்தில் அறியப்பட்ட பதிவர். சில போலிகள் பெயரிலிகளாக முகமீலிகளாக இணையத்தில்
இருப்பவர்கள் பெரியாரியம் பற்றி எந்த பதிவு போட்டாலும் அங்கே விவாதத்திற்கு செல்வதில்லை. அது பயனற்றது என்று தெரியும். இருப்பினும் அப்பதிவில் இஸ்ஸாம் மதத்திற்கு பெரியார் மாறச்சொன்னார் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்கிறீர்கள்.

இதற்கு நான் பதில் சொல்வதைவிட பெரியார் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள் :

http://tamizachiyin-periyar.com/index.php?article=758


கிறிஸ்து இஸ்லாம் மதங்களை பெரியார் விமர்சிக்கவில்லையா?
http://tamizachiyin-periyar.com/index.php?article=850


இந்து முஸ்லீம்
http://tamizachiyin-periyar.com/index.php?article=844

இந்து மதமும் இஸ்லாம் மதமும்
http://tamizachiyin-periyar.com/index.php?article=696

இஸ்லாம் மத ஒழுக்கம்
http://tamizachiyin-periyar.com/index.php?article=724

இஸ்லாத்தில் உயர்வு தாழ்வு இல்லை
http://tamizachiyin-periyar.com/index.php?article=729


இந்து முஸ்லீம் ஒற்றுமை
http://tamizachiyin-periyar.com/index.php?article=731

Anonymous said...

ஹலோ தமிழச்சி,
வால்பையன் என்ன சொல்றாரு... நீங்க என்ன பெனாத்துறீங்க?

தொடர்பில்லாமல் பேசுவது போல் உள்ளது உங்கள் பின்னூட்டம்.

மற்றபடி நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடே.

சித்தார்த்தன்

malar said...

"இஸ்லாம் மதம் பெண்களை மதிப்பதில்லை என்று எழுதியிருக்கிறார்கள்"

வேறு எந்த மதத்தில் பெண்களை மதிக்கிறார்கள் ?.தனி பட்ட மனிதர் அவரவர் விருப்பத்துக்கு தக்கவாறு நடக்கும் போது அதில் ஏன் மதம் வருகிறது ? இஸ்லாம் பெண்களை மதிக்காதே என்று சொல்லவே இல்லை.

பெரியாரை பற்றி பேச நமக்கு அனுபவம் பத்தாது.

இஸ்லாம் பெண்களை ரொம்ப பாதுகாப்பாக இருக்க சொல்கிறது .காரணம் படைப்பில்

உடல் அமைப்பு ஆண்களை போல் பெண்களுக்கு இல்லை .

மொத்தத்தில் மதத்தை பற்றி பேசிட்டே இருந்தால் குருடன் யானையை தடவியகதை

தான்

தமிழச்சி said...

இஸ்லாம் மதம் பெண்களை மதிப்பதில்லை என்று எழுதியிருக்கிறார்கள்"

வேறு எந்த மதத்தில் பெண்களை மதிக்கிறார்கள் ?.தனி பட்ட மனிதர் அவரவர் விருப்பத்துக்கு தக்கவாறு நடக்கும் போது அதில் ஏன் மதம் வருகிறது ? இஸ்லாம் பெண்களை மதிக்காதே என்று சொல்லவே இல்லை.

பெரியாரை பற்றி பேச நமக்கு அனுபவம் பத்தாது.

இஸ்லாம் பெண்களை ரொம்ப பாதுகாப்பாக இருக்க சொல்கிறது .காரணம் படைப்பில்

உடல் அமைப்பு ஆண்களை போல் பெண்களுக்கு இல்லை .

மொத்தத்தில் மதத்தை பற்றி பேசிட்டே இருந்தால் குருடன் யானையை தடவியகதை

தான்///

வணக்கம் மலர்

டக்கென அப்படி சொல்லிவிட முடியாது. நம் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் போது நமக்குள் புரிதல் உருவாகுமல்லவா? பேசத்தான் ஆட்கள் இல்லை கேள்வி கேட்கத்தான் யாருமில்லை. ஆமாம் போட்டுக்கொண்டே இருந்தால் என்னாவது? மதம் என்பது தர்க்கம் செய்ய வேண்டிய சங்கதிதான்.

தமிழச்சி said...

//ஹலோ தமிழச்சி,
வால்பையன் என்ன சொல்றாரு... நீங்க என்ன பெனாத்துறீங்க?

தொடர்பில்லாமல் பேசுவது போல் உள்ளது உங்கள் பின்னூட்டம்.

மற்றபடி நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடே.

சித்தார்த்தன்//


தொடர்பில்லாமல் பேசிக் கொண்டிருப்பது நானா அல்லது சித்தார்த்தன் பெயரில் இருக்கும் அனானியா என்பதை கூட
வாசகர்களால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

000

வால் அனானிகள் குறித்த பின்னூட்டங்கள் என்னைப்பற்றி ஆபாசமாக வருமெனில் பிரசுரிப்பதில் கவனம் செலுத்துவது நலம்.

வால்பையன் said...

இஸ்லாம் பெண்களை ரொம்ப பாதுகாப்பாக இருக்க சொல்கிறது .காரணம் படைப்பில்

உடல் அமைப்பு ஆண்களை போல் பெண்களுக்கு இல்லை .//

இதை ஒருதலை பட்சமாக அதாவது உங்கள் பக்க நியாயமாகவே ஏற்று கொள்ளலாம்.

இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதமுமே மக்களை பாதுகாப்பாகத்தான் இருக்க சொல்கிறது, அதே நேரம் அது கட்டளை தோணியில் வருகிற போது ஒரு சர்வாதிகாரியின் எண்ண அலைகளை நிறைவேற்ற கொண்டு வந்த சட்டம் போலத்தான்.

இன்றைய அரசியலுக்கும் அன்றைய மததிற்கும் பெரிதாக் ஒன்றும் வித்தியாசமில்லை. இன்று அரசியல்வாதிகள் தங்களை நல்லவர்களாக காட்ட அளிக்கும் சலுகைகள்
அன்று மக்களை மதத்திற்குள் அழைக்க மதங்கள் செய்த மாயைகள் இரண்டும் ஒன்றுதான்.

இஸ்லாம் பெண்களை பாதுகாப்பாக இருக்க சொன்னாலும், அதை ஏற்று கொள்வதும் ,மறுப்பதும் பெண்களின் தனி பட்ட உரிமை.

சமீபத்தில் சனியாவை குட்டை பாவாடை போட்டு விளையாட கூடாது என்று சொன்னது சர்வாதிகராம் தானே!

மதமும், கடவுளும் ஏன் படைக்கப்பட்டது என்று கொஞ்சம் யோசித்தாலே அது எவ்வளவு பெரிய புனைவுகள் என்பது தெரிந்துவிடும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலர்

வால்பையன் said...

வால் அனானிகள் குறித்த பின்னூட்டங்கள் என்னைப்பற்றி ஆபாசமாக வருமெனில் பிரசுரிப்பதில் கவனம் செலுத்துவது நலம்.//

என்னை ஆபாசமாக திட்ட அனுமதிப்பேனே தவிர எனது வலையில் உங்களை மட்டுமல்ல மற்றவர்கள் மீது தனிமனித தாக்குதல் நடுத்துவதை நான் கடுமையாக கண்டிப்பேன்.

நண்பர் சித்தார்தனின் புரிதலில் தவறு இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம் ஆனாலும் அவரது கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் தான் அந்த பின்னூட்டம் வெளியிடப்பட்டது.

அவர் உங்கள் கருத்துகளில் முழுமையாக உடன்படுகிறார், இந்த பதிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறார் அவ்வளவே!

தமிழச்சி said...

//அவர் உங்கள் கருத்துகளில் முழுமையாக உடன்படுகிறார், இந்த பதிவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறார் அவ்வளவே!//

இல்லை வால் நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள். என் கருத்துக்கு உடன்படாதவர், உடன்பட்டவர்கள் என இனம் பிரிக்கவில்லை. உங்களுக்கு தெரிந்த சங்கதிதானே! நான் பின்னூட்டம் இட்டால் அங்கு ஆபாசமாக பேசிக் கொண்டு அனானிகள் வருவது உங்களுக்கு தெரிந்தது தானே. அதனால் கவனமாக இருக்கச் சொன்னேன்.

000

//சமீபத்தில் சனியாவை குட்டை பாவாடை போட்டு விளையாட கூடாது என்று சொன்னது சர்வாதிகராம் தானே!//

அதைவிட இன்னொரு சங்கதி கவத்தீர்களா? கன்னடத்தில் காதலர் தினம் பற்றிய சர்ச்சை! காதலர்களை கண்டால் திருமணம் செய்து வைத்துவிடுவார்களாம். இவர்கள் கூத்து இப்படியென்றால் அப்படி சொல்லிய அமைப்புக்கு பெண்களின் ஜட்டிகளை அனுப்பி வைக்கப் போகிறார்களாம் இளசுக்கள்? எங்கே தவறு இருக்கிறது? இரு பக்கமும் தானே!

Anonymous said...

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு...
ஆக மொத்தம் நம்பினோர் கைவிடப் படார்...

malar said...

////இஸ்லாம் பெண்களை பாதுகாப்பாக இருக்க சொன்னாலும், அதை ஏற்று கொள்வதும் ,மறுப்பதும் பெண்களின் தனி பட்ட உரிமை//

எது ஒன்றுமே அவரவர் விருப்பம் தான்.கிணறு இருக்குது பார்த்து போ என்று தான் சொல்வார்கள் போய் விழு என்று சொல்ல மாட்டார்கள் .

//.சமீபத்தில் சனியாவை குட்டை பாவாடை போட்டு விளையாட கூடாது என்று சொன்னது சர்வாதிகராம் தானே!//

சொன்னாங்க ground ல் போய் பெரிய பாவாடைய கொடுத்து போட சொன்னங்களா?

அவங்கதான் அதன்படி நடந்தான்களா?


//டக்கென அப்படி சொல்லிவிட முடியாது. நம் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளும் போது நமக்குள் புரிதல் உருவாகுமல்லவா? பேசத்தான் ஆட்கள் இல்லை கேள்வி கேட்கத்தான் யாருமில்லை. ஆமாம் போட்டுக்கொண்டே இருந்தால் என்னாவது? மதம் என்பது தர்க்கம் செய்ய வேண்டிய சங்கதிதான்.//

உங்கள் கருத்துக்கு நன்றி ............தமிழச்சி

malar said...

அதே குட்டை பாவாடையை உடுத்து ஒரு பெண்ணையும் அடக்கமாக உடித்தி ஒரு பெண்ணையும் வீதியில் போக சொலுங்கள் வித்தியாசம் தெரியும்

வால்பையன் said...

malar said...

அதே குட்டை பாவாடையை உடுத்து ஒரு பெண்ணையும் அடக்கமாக உடித்தி ஒரு பெண்ணையும் வீதியில் போக சொலுங்கள் வித்தியாசம் தெரியும்//

உடை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மறக்க ஆதி மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு இன்று நககண் கூட தெரியாமல் மறைத்து கொள்வதால் மற்றவர்கள் மனதில் தோன்றும் வன்மங்களை உங்களால் அழிக்க முடியாது,

ஆபாசம் என்பது உடுத்தும் உடையிலில்லை, பார்க்கும் கண்களிலிருக்கிறது, வெறும் ஜட்டியோடு ஒரு பெண் கடந்து சென்றாலும் சாதாரணமாக நம்மாளும்(ஆணாலும்) கடக்க முடியும்.

உலகில் பல கடற்கரைகளில் இதை காணலாம்.

//ground ல் போய் பெரிய பாவாடைய கொடுத்து போட சொன்னங்களா?

அவங்கதான் அதன்படி நடந்தான்களா? //

ஒரு விளம்பர படபிடிப்பின் போது பெரிய பிரச்சனை நடந்ததாக பேப்பரில் படித்திருக்கிறேன்.

வால்பையன் said...

நான் பின்னூட்டம் இட்டால் அங்கு ஆபாசமாக பேசிக் கொண்டு அனானிகள் வருவது உங்களுக்கு தெரிந்தது தானே. அதனால் கவனமாக இருக்கச் சொன்னேன்.//

கண்டிப்பாக படிக்காமல் அனுமதிக்க மாட்டேன்.

//அதைவிட இன்னொரு சங்கதி கவத்தீர்களா? கன்னடத்தில் காதலர் தினம் பற்றிய சர்ச்சை! காதலர்களை கண்டால் திருமணம் செய்து வைத்துவிடுவார்களாம். இவர்கள் கூத்து இப்படியென்றால் அப்படி சொல்லிய அமைப்புக்கு பெண்களின் ஜட்டிகளை அனுப்பி வைக்கப் போகிறார்களாம் இளசுக்கள்? எங்கே தவறு இருக்கிறது? இரு பக்கமும் தானே!//

இந்த கலாச்சார போலிஸ்களை பற்றி தான் அடுத்த பதிவு இட உள்ளேன்.
இவர்களுக்கு ஜட்டி அனுப்புவது பப்புக்கு சென்ற பெண்களோ, அல்லது இன்றும் பப்புக்கு என்று கொண்டிருக்கும் பெண்களோ அல்ல, அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்ற பெயரில் வந்திருக்கும் சில மாதர் சங்கங்கள்,
அவர்களை பின்னால் இருந்து இயக்குவது, கர்நாடக இரண்டாம் தர எதிர்கட்சிகள்

தமிழச்சி said...

//சில நாட்களுக்கு முன்பு என் வாசகர் ஒருவர் காதலர் தினம் அன்று கர்நாடகத்தில் நடக்க இருக்கும் கூத்து பற்றி கேள்வி கேட்டார். அதை இங்கு பிரசுரிக்கிறேன்.//

000

Name : vaasu
e-mail : vaasugentle@yahoo.co.in

message :
பெண்கள் ஜட்டி அனுப்பும் போராட்டம் .
------------------------------------------------------

மங்களூரில் விடுதியில் பெண்கள் குடித்து விட்டு ஆடுகிறார்கள் என்று சொல்லி அவர்களை அடித்து உதைத்து பெருமை தேடி கொண்ட ராம் சேனை இப்போது காதலர் தினத்தன்று இதே போல் செய்ய மிரட்டல் விடுத்துள்ளது . யாராவது ஜோடியாக சென்றால் உடனே திருமணம் நடத்தப்படும் , அவர்க அண்ணன் தங்கை என்று கூறினால் அவர்கள் பிறப்பு சான்றிதழை கொண்டு செல்ல வேண்டும் . இது போன்ற பல சமூக சேவைகளை (!!!) ராம் சேனை செய்ய திட்டமிட்டுள்ளது . இதை தொடர்ந்து பெங்களூரில் இவர்களுக்கு பதிலடி கொடுக்க பெண்கள் பாதுகாப்பு இயக்கமொன்று எல்லா பப்புகளிலும் ஒரு அட்டைபெட்டி வைத்துள்ளது . இதில் பெண்கள் பயன்படுத்திய ஜட்டிகளை சேகரித்து காதலர் தினத்தன்று ராம் சேனையின் தலைவர் முதாளிக் அவர்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து பல பெண்கள் பங்களித்துள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன .

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=56690

--------------------------------------------
தமிழ்சி ,

இவர்களையும் புதுமை பெண்கள் என சொல்வீர்களா ? சனிகிழமை தோறும் தண்ணி அடித்து இரவு முழுவது எவனாவது துட்டு உள்ள பார்டிக்கு கம்பெனி கொடுத்து ஆடி பின் அவனோடு ஒட்டி கொண்டு சில மாதங்கள் ஓட்டுவது .. இதனை நீங்கள் புதுமை பெண்களுக்கான குணங்கள் என்று சொவீர்களா ?

எதிர்ப்பை காட்டுகிறேன் பேர்வழி என்று ஜட்டியை அனுப்பும் பெண்மணிகள் .. வாழ்க இந்தியா ..

பெண்கள் மீதான் தாக்குதல் கண்டிக்க தக்கது என்றாலும் நாம் இந்த பப் கலாச்சாரத்தையும் உற்று நோக்க வேண்டியது அவசியம் . இன்று சென்னையில் மேட்டுக்குடி மக்கள் மட்டும் நட்சத்திர ஓட்டல்களில் பப்புக்கு சென்று குமாலம் அடிக்கின்றனர் . ஆனால் பெங்களூர் சென்று பாருங்கள் பப்புக்கு சாதாரண மக்களும் செல்லலாம் நன்றாக குடித்து விட்டு கும்மாளமிடுவது .. இதோடு நிறுத்தி கொண்டால் பரவாயில்லை வினையே இதற்கு அப்புறம் தான் வருகிறது ..

பெங்களூரில் உள்ள பெரும்பாலான ஆண்களிடம் பெண்களை கரெக்ட் செய்ய எது சிறந்த இடம் என்று கேட்டு பாருங்காள் கண்டிப்பாக எதவாது ஒரு பப்புக்கு ரெகுலரா போ என்பான் .. இந்த பெண்கள் சர்வ சாதரணமாக புகை பிடிப்பது , மது அருந்துவது என ஆண்களுக்கு நிகராக களம் இறங்கி இருப்பார்.. இது அவர்கள் சுதந்திரம் என விட்டு விடலாம் .. ஆனால் கம்பெனி என்ற பெயரில் சில பெண்கள் பப்புக்கு பர்ஸ் பெரிதாக , சொந்த கார், பெர்சனாலிட்டி என்று வாந்தால் உடனே அவனுக்கு கம்பெனி கொடுக்க சென்று விடுவது ...

நண்பர்களே மேலை நாடுகளில் சனி கிழமை தோறும் அணைத்து பபுக்களும் நிரம்பி வழியும் .. அணைத்து இளைஞ்சர்களும், இளைஞ்சிகளும் சிங்காரித்து குடித்து கும்மாளமடித்து அன்றைய தினம் எவனாவது ஒருவனிடம் ஒட்டி கொண்டு களிப்பர்.. இன்று இந்த பப் கலாச்சாரமும் ஏறத்தாழ அந்த நிலையை எட்டி உள்ளது ..

பெண்கள் நீங்கள் எல்லா சரக்கையும் நல்ல குடிங்கா, புகை பிடிங்கா அது சுதந்திரம் ஆனால பப்புகளில் கம்பெனி கொடுக்கிறேன் என்று மாதத்திற்குள் ஒருவனிடம் தொற்றி கொண்டு அவன் பர்சை காலி செய்து இதனையும் ஒரு பொழுதுபோக்கு மாதிரி செய்தால் அது சற்று ஒரு அருவருப்பை ஏற்படுத்தும்

இது என் கருத்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்த புதுமை பெண்களை பற்றி ?

0000000000000000

கர்நாடக அரசியல் பற்றி சரியாக தெரியாததால் இன்னும் எந்த பதிலும் அளிக்காமல் வைத்திருக்கிறேன். இதில் அரசியல் பிண்ணனிகள் ஏதாவது இருக்கிறதா?

வால்பையன் said...

பொருளாதாரம் பல மடங்கு சரிந்த நிலையில் அவனவன் சோத்துக்கே ஜிங்கி அடிச்சிகிட்டு இருக்கான், இதுல ஜோடி தோடுறானாமாம்.

சென்ற ஆண்டு அதாவது இந்த பி.ஜே.பி ஆட்சிக்கு முன்னாள் இந்த பப் கலாசாரம் கொடி கட்டி பறந்தது. தொலஒகாட்சி டாக்சோக்களில் மென்பொருள் தொழில் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறதா என்று கூவி கொண்டிருந்தார்கள்.

ஆணும் பெண்ணும் எதிர்பால் ஈர்ப்பு கொள்வது இயற்கை, அதை அடக்குதல் மேலும் வன்மத்தை தூண்டலாம், அதனால் தான் பள்ளிகளில் இருபாலர் பள்ளிகளே சிறந்தது என உளவியல் குழுமம் சான்று அளிக்கிறது,

இந்த இந்தத்துவா என்னும் கலாச்சார போலிஸ்கள் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.

நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது, இரண்டாம் தர அரசியல் பிண்ணனி உள்ள மாதர் சங்கங்கள் தான்.

வால்பையன் said...

என்னை பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை என்பது வேறு , மூட நம்பிக்கை வேறு//

:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மந்திரன்.

malar said...

உலகில் பல கடற்கரைகளில் ஜ்ட்டியோடி குளிப்பதை விடுங்க குற்றாலத்தில் ஜ்ட்டியோடி

எந்த பெண்ணாவது குளிக்க பார்த்திருக்கிறேர்களா ?

வால்பையன் said...

malar said...

உலகில் பல கடற்கரைகளில் ஜ்ட்டியோடி குளிப்பதை விடுங்க குற்றாலத்தில் ஜ்ட்டியோடி

எந்த பெண்ணாவது குளிக்க பார்த்திருக்கிறேர்களா ?//

நல்லா கேக்குறிங்க அம்மணி டிடையிலு
யார் யார் ஜட்டியோட குளிக்கிறாங்கன்னு பார்க்குறது தான் என் வேலையா!

ஆபாசம் ஜட்டியியுடன் பார்ப்பதில் இல்லை, ஈர உடையுடனும் சிலர் காம கண்ணில் ஊடுறுவுகிறார்கள்.

நான் இன்னும் குழந்தை பையனாகவே இருப்பதால் அதில் நாட்டம் ஏற்படவில்லை.

பார்ப்பதிலேயே ஒருவன் திருப்தியடைகிறான் என்றால் எந்த அளவு இந்த பூமி வரண்டு போகிருக்கிறது என்று வருத்தம் கொள்கிறேன்.

விழிப்புணர்வு தேவை,

malar said...

//விழிப்புணர்வு தேவை,//

இதை தான் நானும் சொல்கிறேன்

தமிழச்சி said...

//இந்த இந்தத்துவா என்னும் கலாச்சார போலிஸ்கள் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவார்கள்.

நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது, இரண்டாம் தர அரசியல் பிண்ணனி உள்ள மாதர் சங்கங்கள் தான்.//

எல்லாவற்றிலும் அரசியல் புகுந்துவிட்டது. சென்ற வருடம் கனடாவில் பெண்கள் சந்திப்பு நடந்தது. ஜட்டிகளையும் பாடிகளையும் மண்டபத்தில் தொங்கவிட்டிருந்தார்கள். ஆண்உறைகளால் பேனர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உள்ளாடை புரட்சியை தொடங்கிவிட்டார்கள் பெண்கள். தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த பெண் இலக்கியவாதி ஒருவர் யோனி கட்டுடைப்பில் பெண்ணூரிமை இருக்கிறது என்று பேட்டி கொடுக்கிறார். இந்த கூட்டத்திற்கும் அரசியல் தொடர்பு இருக்கிறது.

மற்ற கதைகளை இந்த இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள். இதுதான் பெண்ணுரிமை என்று தங்கள் சொந்த அரிப்புக்களை தீர்த்துக் கொள்ள ஒட்டு மொத்த பெண்களையும் துணைக்கு அழைக்கிறார்கள்.

http://thesamnet.co.uk/?p=2105

http://thesamnet.co.uk/?p=2152

http://thesamnet.co.uk/?p=2705

தமிழச்சி said...

//உலகில் பல கடற்கரைகளில் ஜ்ட்டியோடி குளிப்பதை விடுங்க குற்றாலத்தில் ஜ்ட்டியோடி

எந்த பெண்ணாவது குளிக்க பார்த்திருக்கிறேர்களா ?//

நியாயமான கேள்விதான். பெண்ணுரிமை அமைப்புகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

Anonymous said...

தோழர்களே,
பெரியார் என்பது ஒரு வழ்க்கை நெறியும் கூட. கடவுளுக்காக நீங்கள் முட்டிமோதும் போது அங்தக்கடவுள் ஏதும் வரவில்லை. அது சுதந்திரம் என்பது பிடிவாதம். ம்னிதகுல சீர்கேட்டிற்கு காரணம் காணும் போது பெரியார் கண்ட வழி
முறை அது. அவர் பெயரைச்சொல்லுபவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவரோ அவரது கொள்கையோ பொருப்பாகாது. "மனித பேதம் ஒழியவேண்டுமானால் ம்தம் ஒழிய வேண்டும் எஙிரேன்,அன்றியும் ம்தம் ஒழுந்த
இடத்தில்தான் ம்னிதனின் பிறவி பேதம்
ப்தைக்கப்படுகிறது்" என்று பெரியார் கூறியுள்ளார். மதம் கடவுளை,சாத்திரத்தினை ,அடிப்படயாகக்கொண்டுள்ளது. எனவே அனைத்தும் அவரால் எதிற்க்ப்படுகிறது .எங்களால்
மதமின்றி,கடவுளின்றி,சாதி இன்றி,நல் வாழ்வு வாழ முடிகிறது. ஏன் நீங்களும் இப்படி வாழுங்கள் என்று நாங்கள் கேட்க்கக்கூடாது. சிந்திக்க வந்துவிட்டீர்கள் துணிந்து சிந்தியுங்கள். சிந்திகாமல் இருந்துவிடாதீர்கள் என்பத்தே
பெரியார். நன்றி தோழரே.

மந்திரன் said...

//பள்ளிகளில் இருபாலர் பள்ளிகளே சிறந்தது என உளவியல் குழுமம் சான்று அளிக்கிறது,//
அப்புறம் என் சாமி , பசங்க மட்டும் கம்மியா தேர்ச்சி பெறுகிறார்கள் ? எதாவது ஏக்கமா ?

//நான் இன்னும் குழந்தை பையனாகவே இருப்பதால் அதில் நாட்டம் ஏற்படவில்லை. //
அய்யோ ..சோ ஸ்வீட் ..

//உலகில் பல கடற்கரைகளில் ஜ்ட்டியோடி குளிப்பதை விடுங்க குற்றாலத்தில் ஜ்ட்டியோடி
எந்த பெண்ணாவது குளிக்க பார்த்திருக்கிறேர்களா //

அட பாவிகளா ! இந்திய அரசியல்ல , ஜட்டிக்கு கூட முக்கிய இடம் இருக்கு போல ...topic-அ மாத்துங்க நண்பர்களே

பகுத்தறிவு? said...

/////////////பகுத்தறிவு என்றால் என்ன? கேள்வி கேள் என்பது தானே! சொன்னது பெரியாராக இருந்தாலும் ஏன் இதை நான் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா!
ஆனால் பெரியாரை கடவுளாகவே மாற்றும் திட்டம் அல்லவா இங்கே நடந்து கொண்டு இருக்கிறது./////////


நாஸ்திகம் பேசியதில் முதன்மையாளரான தந்தை பெரியார் கூறுகிறார்

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. 28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)

இவ்வறிஞரின் கூற்றை அடையாளப்படுத்துவதற்காக சிந்திக்க வேண்டுகிறேன்.

###இவ்வாதம் அறிவியல்வாதமா?
அல்லது அடிப்படைவாதமா?
####தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
###தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள் எவ்வாறிருப்பர்?

எவர் எவ்வாறிருப்பினும் இன்று நாம் மிக ஆழமான தேடலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது கடமை என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம் முழு உலகிடமும் இன்று மிகைத்து நிற்பது மரணத்திற்கு பின் அமையப்போகும் வாழ்க்கை குறித்த அச்சம் கலந்த பார்வையே ஆகும்.

!

Blog Widget by LinkWithin