நாம் வாக்காளர்களா இல்ல மடையர்களா!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் 2004 ல் விறபனையான விலைக்கு வந்துவிட்டது. கிட்டதட்ட 12 வருடத்திற்கு முன் இருந்த விலை. அப்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தெரியுமா?
உலக சந்தையில் விலை இறங்கும்போதெல்லாம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை குறைத்து விலையை சமம் செய்வது. அது முடியாத பட்சத்தில் கலால் வரியை உயர்வது என மக்கள் நல விரோத அரசாக பாஜக செயல்படுகிறது.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் முழுதாய் முடியவில்லை, எட்டு முறை கலால் வரியை உயர்த்தியுள்ளார்கள். கங்கையை சுத்தபடுத்த 1000 கோடி, வல்லபாய் படேலுக்கு சிலை வைக்க 1300 கோடி என நம் பணம் வீணாய் தான் போகிறது.



அரசியல்வாதிகளின் பெரிய பலமே நடுத்தரவர்க்கத்தை தவிர மீதம் உள்ள அனைவரும் தான். விலைவாசி உயர்வை பற்றி கவலை படுவது நடுத்தரவர்க்கம் மட்டுமே. மேல்தட்டு மக்களுக்கு என்ன விலை என்றாலும் கவலை இல்லை. கீழ்தட்டு மக்களுக்கு வெறும் கஞ்சிய குடிச்சே வாழ்ந்துகிறேன்னு பெருந்தன்மை.

இதுவரை ஊழல் இல்லைன்னு பெருமையா வேற சொல்லிகிறாங்க. சுத்பாரத் மாதிரி திட்டத்திற்கு இவர்கள் செய்யும் செலவு எல்லாமே அரசு இழப்பீடு தான். மோடியின் வெளிநாடு சுற்றுபயணமும் பெரிய வெற்றியெல்லாம் இல்லை. மோடி போகாட்டியும் நடக்க வேண்டியது நடந்துகிட்டு தான் இருக்கும்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரப்போகின்றது. அம்மா உணவகம் மட்டுமே உருப்படியான ஒன்று. இலவச மடிகணிணி, இலவச கால்நடைகளில் ஊழல் நடந்துருக்காதுன்னு சொன்னா அதிமுககாரன் கூட நம்ப மாட்டான். ஏன்னா அடிமைகளுக்கு அரசியல்வாதிகள் ஊழல் செய்வது தவறில்லைன்னு ஊறிபோச்சு.

செயல்படாத அரசுன்னு குறை சொல்லும் திமுகவிடம் நீங்க ஏன் அப்ப பண்ணலன்னு கேட்டா சரியான பதில் இல்லை. லோக் ஆய்க்தா சட்டம், மதுவிலக்கு திமுகவால் அப்பொழுது மறுக்கபட்ட ஒன்று தான். மேலே காங்கிரஸும், பாஜகவும் ஒன்று என்றால். கீழே திமுகவும், அதிமுகவும் ஒன்று. அவர்களுக்கு மாற்றி மாற்றி ஓட்டுபோடுவது நம் முட்டாள்தனத்தை தவிர வேறில்லை.

கட்சியை பார்த்து ஓட்டு போடுவது பொதுபுத்தி மனநிலை வெற்றிபெரும் பக்கம் இருப்பது ஒரு பெருமிதம். நல்ல வேட்பாளரா? படிச்சவரா? மக்களுக்கு நல்லது செய்யும் ஆர்வம் உள்ளவரா? அவரது கொள்கைகள் என்ன? தொகுதி பற்றி அவரது அறிவு உள்ளவரான்னு பார்த்து போட்டால் இந்த முறை தப்பிக்கலாம். இல்லையென்றால் திரும்பவும் அஞ்சு வருசம் கழிச்சு அதிமுக வரும், திரும்ப திமுகன்னு அவுங்களுக்கு பயம் இல்லாம போயிரும். தவறுகளை துணிந்து செய்ய மக்களின் இந்த பொதுபுத்தியே காரணம். உங்க தொகுதி வேட்பாளர் எந்த கட்சியா இருந்தாலும் சரி. அவர் எப்படிபட்டவர் என முழுதாக அறிந்து வாக்களியுங்கள்.

சாதி அபிமானம், மத அபிமானம், கட்சி அபிமானம், செலிபிரட்டி அபிமானம் பாத்து நீங்கள் எதுவும் நன்மை அடைந்ததுண்டா? இங்கே கட்சிக்கு ஆதரவாக எழுதும் அனைவரும் அதற்கு பணம் பெறுபவர்கள் தெரியுமா?
நாம் தமிழரோ, பாமகவோ, விசிகவோ உங்கள் தொகுதிக்கு நல்லது பண்ணுவாரான்னு பார்த்து ஓட்டு போடுங்க. ஜனநாயகத்தை மதிங்க. காசு கொடுத்தா பரவாயில்லைங்க. உங்களுக்கு தான் ஓட்டு போடுவேன்னு சமாளிச்சிட்டு நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க.

இப்படி புலம்பி புலம்பியே நான் மெண்டல் ஆகிருவேன் போல்!

3 வாங்கிகட்டி கொண்டது:

KiD ஆர்டின் KannaN said...

நாங்க திருந்துவோம்னு நம்புறிங்களா???? :-)

யாஸிர் அசனப்பா. said...

//நாம் வாக்காளர்களா இல்ல மடையர்களா! ///

இதுல என்ன சந்தேகம் வேண்டிக்கிடக்கு.
கேள்விகேட்டா பாக்கிஸ்தான் போகச்சொல்லுறாய்ங்க.

karunyas.blogspot.com said...

ஊழல் செய்கிறவனை இப்போதுள்ள பெரியவர்கள் பணம் சம்பாதிக்கிறான் என பேசுகின்றார்கள்... இளைஞகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே இப்படி இருக்கின்றார்கள்.... மற்றபடி உங்களது மன நிலையில் தான் நானும்... வாழ்த்துக்களுடன் செல்வின்.

!

Blog Widget by LinkWithin